ஊழல் நாத்தால் 51க்கும் மேற்பட்ட ஏழை நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் ‘ஜன் ஆஷிர்வாத் யாத்ரா’வை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடியசைத்து இன்று தொடங்கிவைத்தார். இந்த யாத்திரைகள் செப்டம்பர் 25 ஆம் தேதி மாநிலத் தலைநகர் போபாலில் ‘கார்யகர்த்தா மஹாகும்பத்துடன் முடிவடைகிறது.
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, சமீபத்தில் மாண்ட்லா மாவட்டம் முழு கல்வியறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் இந்த பகுதியில் தொடங்கப்பட்ட எழுத்தறிவு பிரச்சாரம் தொடங்கியத்திற்காக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானைப் பாராட்டினார்.
பாரதீய ஜனதா கட்சி அனைத்து துறை வளர்ச்சியின் மூலம் ஒவ்வொரு பிரிவினருக்கும் சமூக பொருளாதார பாதுகாப்பை வழங்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கமல்நாத்தின், முந்தைய காங்கிரஸ், ஆட்சிக் காலத்தில் ‘ஊழல்’ செய்யப்பட்டது. “இந்த ஊழல் நாத்தால், 51க்கும் மேற்பட்ட ஏழை நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பணம் வசூலிக்கும் அலுவலகமாக முதல்வர் அலுவலகம் மாறியது.
தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கான அரசாக பாஜக உள்ளது.
“நாட்டில் சிறுபான்மையினருக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். காங்கிரஸ் அரசாங்கம் திருப்திப்படுத்தும் அரசியலில் மட்டுமே ஈடுபட்டது, ஆனால் 2014 இல், பிரதமர் பாராளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றியபோது, அரசாங்கம் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கானது” என்று கூறினார்.