50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் இன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 2023ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 75 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
இதில் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், முனைவர் டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் – அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அலங்காநல்லூர், மாலதி-அரசு மேல்நிலைப் பள்ளி, வீரகேரளம்புதூர்,
உயர்கல்வித் துறையில் தமிழ்நாட்டில் இருந்து விருது பெற்றவர்:
டாக்டர் எஸ்.பிருந்தா- பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி, கோயம்புத்தூர்,
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்திடமிருந்து விருது பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்: எஸ்.சித்திரகுமார் -உதவி பயிற்சி அலுவலர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றனர்.