“பாரத்” என்கிற பெயருக்கு பிரபல கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி ஆதரவு தெரிவித்திருக்கிறார். தனது இஸ்டாகிராம் பக்கத்தின் முகப்புப் படத்தை (டி.பி.) மாற்றி இருக்கும் தோனி, பாரதியனாக இருப்பதை பாக்கியமாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஜி20 மாநாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விருந்து கொடுப்பது தொடர்பான அழைப்பிதழில், இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று இடம்பெற்றிருந்தது. உடனே, வரிந்துகட்டிக் கொண்டு களத்தில் குதித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், நாட்டின் பெயரை மாற்றப்போவதாக வதந்தியை கிளப்பி விட்டனர். இந்த வதந்தி கொளுந்து விட்டு எரியும் நிலையில், பாரத் என்கிற பெயருக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்புத் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் முதல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப் பச்சன் வரை ஏராளமானோர் வரவேற்புத் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வகையில், தற்போது தல தோனியும் வரவேற்புத் தெரிவித்திருக்கிறார். பிரபல கிரிக்கெட் வீரரும், முத்தரப்பு கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக்கொடுத்தவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றி இருக்கிறார்.
அதாவது, இந்திய தேசியக் கொடியின் பின்னணியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் “பாரதியனாக இருப்பதை பாக்கியமாகக் கருதிகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கும் புகைப்படத்தைத் வைத்திருக்கிறார். தோனியைப் பொறுத்தவரை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வளவு ஈடுபாடு காட்டுவதில்லை. எப்போதாவது முகப்புப் படத்தை மாற்றுவார். அந்த வகையில், 75-வது சுந்திர தினத்தை முன்னிட்டு தனது முகப்புப் படத்தை மாற்றினார். அதன் பிறகு தற்போதுதான் முகப்புப் படத்தை மாற்றி இருக்கிறார். ஆகவே, “பாரத்” பெயர் மாற்றத்திற்கு தோனி ஆதரவு அளித்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.