செப்டம்பர் 7 மற்றும் 11 க்கு இடையில் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்களை வைத்திருக்கும் பயணிகள் தங்கள் விமானம் அல்லது பயண தேதியை மாற்ற விரும்பினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக பொருந்தக்கூடிய கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
செப்டம்பர் 7 முதல் 11 வரை டெல்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் இருக்கும். ஆகையால் இந்த தேதிகளில் டெல்லிக்கு வரும் அல்லது டெல்லியில் இருந்து புறப்பட உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்கள் வைத்திருக்கும் பயணிகளுக்குப் பயணச்சீட்டு கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும்.
வரவிருக்கும் ஜி 20 உச்சிமாநாட்டைக் கருத்தில் கொண்டு தேசியத் தலைநகர் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்த அரசிதழ் அறிவிப்பை டில்லி அரசு செவ்வாய்கிழமை வெளியிட்டது. செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் புதுடெல்லியில் ஜி 20 உச்சிமாநாட்டை நடத்த இந்தியா தயாராக உள்ளது.
ஜீ 20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்க்காக உலகத்தலைவர்கள் புதுதில்லி வரவுள்ளனர். புதுதில்லியில், பிரகதி மைதானத்தில் உள்ள அதிநவீன பாரத் மண்டபம் மாநாட்டு மையத்தில் உச்சிமாநாடு நடத்தப்படும். மேலும் நாடு முழுவதும் 60 நகரங்களில் ஜி 20 தொடர்பான சுமார் 200 கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.