வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் , இந்தியப் பிரிவின் முக்கியத் தலைவன் ஒருவனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி இறந்துவிட்டாலும், அந்த அமைப்பு தொடர்ந்து தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக , அமெரிக்கா, மலேசியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள காவல்துறையினர் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனால், அமெரிக்கா, மலேசியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு படையினர் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஆனாலும், ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல் நீடிப்பதாகவும் மலேசிய காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பயங்கரவாதம் உள்ளது, பயங்கரவாத தொகுப்புகள் மிகவும் வலுவானதாக உள்ளது. தமிழ்நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மிகப்பெரிய அளவில் படர்ந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த ஜனவரி மாதம் பிரபல செய்தி நிறுவனத்திற்குப் பரபரப்பு பேட்டியளித்திருந்தார்.
அவரது வார்த்தையை நிரூபிக்கும் வகையில், சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தொடர்பு உள்ளவர்கள் உலா வருவது தற்போது மத்திய காவல்துறை விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதில், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய பிரிவின் முக்கியத் தலைவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதில், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பகுதிகளில் தலைமறைவாகச் சுற்றி திரிந்து வந்தவன் ஐஎஸ்ஐஎஸ் இந்திய பிரிவின் முக்கியத் தலைவர் சையது நபில் அகமது. இவரை கைது செய்யும் நடவடிக்கையில், அதிகாரிகள் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்த நிலையில், போலி ஆவணங்கள் மூலமாக நேபாள நாட்டிற்குத் தப்பிச் செல்ல முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில்தான், சையது நபிலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைதான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபிலிடம் இருந்து டிஜிட்டல் முறைப்படுத்த முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது மற்றும் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுவது உள்ளிட்ட தீவிரவாத செயல்களில் ஈடுபட முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதேபோல, ஈரோடு வனப்பகுதியில் தலைமறைவாக சுற்றித் திரிந்த, ஐஎஸ்ஐஎஸ் -ன் முக்கிய நிர்வாகியான ஆசிஃப் என்பவனையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.