கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2023 ICC உலக கோப்பைக்கான இந்திய அணியை BCCI இன்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறவிருக்கும் 13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியை BCCI இன்று அறிவித்துள்ளது. இதில் ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
முன்னணி நட்சத்திர வீரர்களான அஸ்வின், ஷாஹல், தவான், புவனேஸ்வர் உள்ளிட்டோர் அணியில் இடம் பெறவில்லை. அதேபோல் திலக் வர்மா,பிரசித்தி கிருஷ்ணா, சஞ்சு சாம்சன், ஆகியோரும் அணியில் இல்லை என்பது இரசிகர்களிடையே சிறிது ஏமாற்றம் ஏற்படுத்தியுள்ளது.