சென்னை விமான நிலையம் : 2-வது உள்நாட்டு முனையம் .
Jul 29, 2026, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

சென்னை விமான நிலையம் : 2-வது உள்நாட்டு முனையம் .

சென்னை விமான நிலையத்தில் பழைய வெளிநாட்டு முனையமான டி-4 பகுதியில் தற்பொழுது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 7, 2023, 01:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த வெளிநாட்டு முனையம் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதில் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் இருந்து முழு அளவில் விமான சேவைகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதையடுத்து விமான நிலையத்தில் ஏற்கனவே செயல்பட்ட பழைய சர்வதேச விமான முனையம் மூடப்பட்டது.

விமானநிலையத்தில் தற்போது உள்நாட்டு முனையத்தில் 2-வது தளத்தில் புறப்பாடு பகுதியும் கீழ் தளத்தில் வருகை பகுதியும் செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பழைய சர்வதேச வெளிநாட்டு முனையத்தை, 2-வது உள்நாட்டு முனையமாக மாற்ற விமான நிலைய இயக்குனரகம் முடிவு செய்தது.

அதன்படி பழைய வெளிநாட்டு முனையமான டி-4 பகுதியில் தற்பொழுது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் இருந்த குடியுரிமை பரிசோதனை கவுண்டர்கள் அகற்றப்பட்டு உள்ளன. அதேபோல் கன்வேயர் பெல்ட் அங்கு மாற்றப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி முனையத்தை சுத்தம் செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த 2-வது உள்நாட்டு முனையத்தின் பணிகளை விரைந்து முடித்து அடுத்த மாதத்தில் திறக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 2-வது உள்நாட்டு முனையம் திறக்கப்பட்டால் பயணிகள் கூட்டத்தை எளிதில் கையாள முடியும். மேலும் பயணிகளும் வெகு நேரம் காத்திருக்காமல் எந்த முனையத்தில் எந்த விமானம் இயக்கப்படுகிறது என்று எளிதாக கண்டு பிடித்து செல்லலாம்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, சென்னை விமான நிலையத்தில் 2 உள்நாட்டு முனையம் செயல்பாட்டில் இருக்கும்போது உள்நாட்டு பயணிகளின் கூட்டத்தை எளிதில் கையாள முடியும். பயணிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டியது இல்லாமல் தாங்கள் செல்ல வேண்டிய விமானத்திற்கு எளிதில் செல்லலாம். தற்பொழுது டி-1 முனையத்தில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அடாஸ்கா போன்ற விமான நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படும். டி-4 முனையத்தில் இருந்து ஏர் இந்தியா, ஏர் ஏசியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படும் என்றனர்.

Tags: chennai airportchennai airport second terminal
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி வீரர்கள்!

Next Post

இந்திய மகளிர் ஹாக்கி அணி : உலகக்கோப்பையை வெல்வதே இலக்கு !

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies