மகளிர் ஹாக்கி 5 பேர் ஆசிய கோப்பையை வென்ற பிறகு, 2024 ஆம் ஆண்டு மகளிர் ஹாக்கி 5 பேர் உலகக்கோப்பையை வெல்லதே இலக்காக வைத்துள்ளது.
ஓமனில் மஸ்கட்டில் 2024 ஆம் ஆண்டு மகளிர் ஹாக்கி 5 பேர் உலகக்கோப்பை ஜனவரி 24, 2024 முதல் ஜனவரி 31, 2024 வரை நடைபெறும். குளோபல் அமைப்பான FIH போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
போட்டியின் தொடக்க பதிப்பில் மொத்தம் 16 நாடுகள் போட்டியிடும், அவை நான்கு குழுக்களாக பிரிக்கபட்டுள்ளது.
போட்டியை நடத்தும் ஓமன் அணிவுடன் ‘எ’ பிரிவில் மலேசியா, பிஜி மற்றும் நெதர்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, உக்ரைன் மற்றும் ஜாம்பியா அணிகளும், ‘சி’ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, போலந்து மற்றும் நமீபியா அணிகளும் உள்ளன.
இந்திய மகளிர் ஹாக்கி அணி, இறுதி போட்டியில் தாய்லாந்தை 7-2 என்ற கணக்கில் தோற்கடித்து, 2023 ஆம் ஆண்டு தொடக்க மகளிர் ஹாக்கி 5 ஆசிய கோப்பையை வென்ற பிறகு FIH மகளிர் ஹாக்கி 5 உலகக்கோப்பை ஓமன் 2024 க்கான தகுதியை பெற்றுள்ளது.