தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் கிடைத்தது 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். தமிழகம் செய்த வரி பங்களிப்பை விட இரண்டு மடங்கு அதிகம் திருப்பி பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ளார் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இன்றைய ”என் மண் என் மக்கள்” பயணம், Cotton City என்று அழைக்கப்படும் ராஜபாளையத்தில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது பேரன்பு கொண்ட மக்கள் ஆதரவில் பெரும் சிறப்பாக நடந்தது.
மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் bandage துணிகள் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கும் ராஜபாளையத்தில், சுமார் 5000 க்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சப்பட்டை மற்றும் பஞ்சவர்ணம் மாம்பழ சாகுபடிக்கு பெயர் போன ஊர்.
இன்றைய #EnMannEnMakkal பயணம், Cotton City என்று அழைக்கப்படும் ராஜபாளையத்தில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்கள் ஆதரவில் பெரும் சிறப்பாக நடந்தது.
மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் bandage துணிகள் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கும்… pic.twitter.com/vsg3h7hlcX
— K.Annamalai (@annamalai_k) September 6, 2023
இந்திய ராணுவத்தில் இராஜபாளையம் வகை நாய்களை பெருமளவில் பயன்படுத்துகிறார்கள். இராஜபாளைய நாய்களின் பெருமையை நமது பாரதப் பிரதமர், 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் பெருமையாகப் பேசியிருந்தார்.
விருதுநகர் மாவட்டம் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராஜபாளையம் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த நமது மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பட்டுக்கோட்டை ராஜபாளையம் இடையே 30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டது இந்த பகுதியில் உள்ள வணிகர்களுக்கு நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் இந்த வருடம் கொடுத்த புத்தாண்டு பரிசு என்று சொன்னால் அது மிகையாகாது.
மோடியின் முகவரி: இராஜபாளையம்
வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு முதல் மூன்று வருடங்களுக்கு 54 லட்ச ரூபாய் வரையில் மத்திய அரசு நிதி உதவி மூலம் பயன்பெற்ற இராஜபாளையத்தை சேர்ந்த மொட்டையன், ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற ராஜமம்மாள், சிறுகுறு தொழில்கள் மேம்பட ஒதுக்கப்பட்ட நிதி மூலம் பயன்பெற்று தொழில் முனைவோரான சாந்தி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு பெற்ற ஜோசப், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற திருமதி தேசியம்மாள். சென்ற மாதம் 20ஆம் தேதி, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் மத்திய அரசு அறிவித்துள்ளது. உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 400 ரூபாய் மானியம். இவர்கள்தான் பாரதப் பிரதமரின் முகவரி.
பிரிவினை வாத கும்பலின் தலைவர்களான, தமிழகத்தின் சிறந்த நடிகர் உதயநிதி. அவரது தந்தை ஸ்டாலின் சிறந்த துணை நடிகர் இருவரும், கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்குக் கிடைத்தது 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி என்று பொய் கூறியுள்ளனர்.
தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் கிடைத்தது 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். தமிழகம் செய்த வரி பங்களிப்பை விட இரண்டு மடங்கு அதிகம் திருப்பி கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.
ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்து, கலைஞர் கருணாநிதி. நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகம், பக்கம் 271 – 275 ல், எழுதியிருக்கிறார். ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எதிர்த்து கருத்துக்கள் கூறிக் கொண்டு இருக்கிறார்.
1971ஆம் ஆண்டு மதுவிலக்கை தளர்த்தியது மட்டுமல்ல திமுகவின் சாதனை. தமிழர்கள் அனைவரையும் குடிகாரர்களாக்க ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்ததும் இந்த திமுக தான்.
1990 மார்ச் 6ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதில், ‘தற்போது விற்பனையில் இருக்கும் வெளிநாட்டு வகை மதுபானங்களை ஓரளவு வசதியுள்ளவர்கள் மட்டுமே வாங்க முடிகிறது.
வசதியற்ற ஏழைகள், குடிப் பழக்கம் உள்ளவர்கள் குறைந்த விலையில் மது அருந்த முடியாதக் காரணத்தால், மலிவு விலை மது அன்றைய திமுக அரசால் அறிமுகப்படுத்தபட்டது.
அதன் பின் சாராய ஆலைகளை திமுகவே திறந்து, இன்று தமிழகத்தை ஒரு குடிகார மாநிலமாக மாற்றியுள்ளது திமுக. டாஸ்மாக்கின் பிடியில் இருந்து தமிழகத்தை எப்படி மீட்பது என்று பாஜக ஒரு வெள்ளை அறிக்கை 26.07.2023 அன்று கொடுத்தது. குறைந்தபட்சம் அதையாவது படித்து செயல்படுத்திவிட்டு, அவர்களே சிந்தித்து செயல்படுத்தினார்கள் என்று ஸ்டிக்கராவது ஒட்டியிருக்கலாம்.
கொரோனா காலகட்டத்தில் தாமதமான இராஜபாளையம் இரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் முடிப்போம் என்ற வாக்குறுதி. இவர்கள் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்களில், இன்னும் முடிக்கவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் திறப்பதாகச் சொன்னார்கள் இன்னும் திறக்கவில்லை. இராஜபாளையம் நகராட்சியில் மற்ற நகராட்சிகளை விட சொத்து வரி அதிகம். அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தும் இன்னும் குறைக்கவில்லை.
தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடைப் பணிகளை இன்னும் முடிக்கவில்லை. இராஜபாளையத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்போம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
புதிய பேருந்து நிலையம் தென்காசி இணைப்புச் சாலைப் பணிகள் பல ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. கடந்த முறையும் இந்த தொகுதியில் தங்கபாண்டியன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும், இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டும் இன்னும் நிறைவேற்றவில்லை. அவர், மணல் கொள்ளையர்களின் தலைவர் போல் இங்கு செயல்பட்டு வருகிறார்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், இந்த மக்கள் விரோத ஊழல் திமுக கூட்டணி முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட வேண்டும். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.