திமுகவின் ஊழலை ஒழிக்கத்தான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை- அண்ணாமலை
Sep 12, 2026, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவின் ஊழலை ஒழிக்கத்தான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை- அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Sep 7, 2023, 10:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழலை, டாஸ்மாக்கை, ஏழ்மையை, வறுமையை ஒழிப்போம் என்று சொன்னால், திமுகவோடு கைகோர்க்க தயார் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இன்றைய என் மண் என் மக்கள் பயணம், தமிழகத்திலே ஒரு அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என்பதற்காக, பெரும் திரளெனக் கூடி ஆதரவு தெரிவித்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் மத்தியில் சிறப்பாக நடந்தேறியது.

கடந்த 9 ஆண்டுகளில் நம் பாரத நாடு, நல்ல ஒரு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த போது, உலக அளவில், பொருளாதாரத்தில் 11வது நாடாக இருந்த நம் பாரதம், இப்பொழுது 5 வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

பாஜக ஆட்சியில் நாடு பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கொடுத்து பாரதிய ஜனதா கட்சி பெருமை சேர்த்துள்ளது.

ஆனால் தமிழகத்தில், கடந்த 30 மாதங்களாக, ஒரு குடும்பத்திற்காக மட்டுமே ஆட்சி நடக்கிறது. தினமும் செய்திகளில், கொலை, கொள்ளை, டாஸ்மாக், கஞ்சா, தண்ணீர், ஊழல் பிரச்சனைகள் பற்றிய செய்திகளையே பார்க்கிறோம்.
கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கி இருக்கும் தொகை 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் தமிழக முதலமைச்சர், நிதி எதுவுமே வரவில்லை என்று பொய் கூறுகிறார்.

இன்று கூடியிருந்த இளைஞர்கள் அனைவருமே முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் சொந்த உழைப்பில் முன்னேறுபவர்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலின், அவரது தாத்தா மற்றும் அப்பாவின் பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அமைச்சர் பி டி ஆர் கூறியது போல, 28 மாதத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் மூலம்… pic.twitter.com/yfzmXjb89Y

— K.Annamalai (@annamalai_k) September 6, 2023

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்கிறார் உதயநிதி ஸ்டாலின். சனாதன தர்மம் என்பது அனைத்து மனிதனையும் சமமாக பார்ப்பதே. சனாதன தர்மம் என்பது நம் வாழ்வியல் முறை.

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்றால், அதனை பாஜக ஆதரிக்காது. இப்போது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் திமுக, பின்னர் மாரியம்மனும், அய்யனாரும் வேண்டாம் என்று சொல்லும். நம் ஊரைக் காக்கும் தெய்வங்களை அழிப்பதுதான் திமுகவின் குறிக்கோள். கிறிஸ்தவ சகோதரர்கள் விழாவில் சென்று, நான் ஒரு கிறிஸ்தவன் என்கிறார். இப்போது, நான் எந்தக் கடவுளையும் நம்ப மாட்டேன் என்கிறார். யாருக்காவது உண்மையாக இருக்கிறாரா?

இன்று கூடியிருந்த இளைஞர்கள் அனைவருமே முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் சொந்த உழைப்பில் முன்னேறுபவர்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலின், அவரது தாத்தா மற்றும் அப்பாவின் பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அமைச்சர் பி டி ஆர் கூறியது போல, 28 மாதத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் மூலம் சம்பாதித்திருக்கிறார். திமுகவில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் களையாமல், இந்து மத தர்மத்தை அழிப்போம் என்று சொன்னால் அதனை அனுமதிக்க முடியாது.

ஊழலை, டாஸ்மாக்கை, ஏழ்மையை, வறுமையை ஒழிப்போம் என்று சொன்னால் நாங்களும் திமுகவோடு கைகோர்க்க தயார்.

ஆனால் அவற்றிற்கு திமுக போராடாது. திமுகவின் ஊழலை ஒழிக்கத்தான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையே கொண்டு வந்துள்ளோம்.

மத்திய அரசின் அனைத்து மானியங்களும் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு வருவதற்கு முழு காரணம் திமுக போன்றவர்கள் செய்யும் ஊழலை ஒழிப்பதற்காக தான். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஊழலற்ற, நல்லாட்சி தொடர வேண்டும்.
சந்தர்ப்பவாத திமுக காங்கிரஸ் கூட்டணி முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும்.

வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் மோடி வெற்றியில் தமிழகமும் பெரும்பங்காற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaiannamalai en maan en makkal
Share
Tweet
SendShare
Previous Post

பிரிவினை வாத கும்பலின் தலைவர்கள் ஸ்டாலின், உதயநிதி : அண்ணாமலை.

Next Post

உலக வளர்ச்சியில் “ஆசியான்” முக்கியப் பங்கு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies