உலக வளர்ச்சியில் "ஆசியான்" முக்கியப் பங்கு!
Jul 31, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உலக வளர்ச்சியில் “ஆசியான்” முக்கியப் பங்கு!

ஆசியான் மாநாட்டில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 7, 2023, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவு 40 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கிறது. சர்வதேச அளவிலான வளர்ச்சிக்கு ஆசியான் அமைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

ஆசியான் இந்தியா மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு ஆகியவை இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் இன்று நடைபெற்று வருகிறது. இம்மாநாடுகளில் பங்கேற்குமாறு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ, பாரதப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, பிரதமர் மோடி, நேற்று இரவு 8 மணியளவில் இந்தோனேஷியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 4 மணியளவில் ஜகார்த்தாவை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு இந்தோனேஷியா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, காலை 7 மணியளவில் நடந்த ஆசியான் இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்தாண்டுக்கான கருப்பொருள் ஆசியான் வளர்ச்சியின் மையம் என்பதாகும். ஆசியான் அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இங்கு அனைவரின் குரலும் கேட்கப்படுகின்றன. ஆசியான் வளர்ச்சியின் மையமாக விளங்குகிறது. சர்வதேச அளவிலான வளர்ச்சியில் ஆசியான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவு 40 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கிறது. ஆகவே, ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. ஆசியான் அமைப்பிலுள்ள பிற நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உதவி வருகிறது. கடந்தாண்டு நாங்கள் இந்தியா ஆசியான் நட்பு தினத்தை கொண்டாடி , ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மையை வழங்கினோம். நமது வரலாறும், இந்தியாவையும் ஆசியாவையும் இணைக்கின்றன. குறிப்பாக, அமைதி, செழிப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவை நம்மை ஒன்றிணைக்கிறது.

அந்த அடிப்படையில் இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை நான் வாழ்த்துக்கிறேன். இந்தியாவின் கிழக்குக் கொள்கையின் மையப் புள்ளியாக ஆசியான் திகழ்கிறது. மேலும், இந்தியாவின் இந்தோ-பசிபிக் முன்முயற்சியிலும் இந்தப் பகுதி முக்கியப் பங்கு வகிக்கும். உலக நிச்சயமற்ற சூழலில் கூட, ஒவ்வொரு துறையிலும் நமது பரஸ்பர ஒத்துழைப்பு சீராக முன்னேறி வருகிறது” என்று பிரதமர் மோடி பேசினார்.

Tags: PM ModiAsean India Summit 2023Speech
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் ஊழலை ஒழிக்கத்தான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை- அண்ணாமலை

Next Post

சனாதன தேர்தலாக சந்தித்துக்கொள்ளலாமா?- ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் !

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies