லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய் மூன்று நாட்களில் எத்தனை முதலீட்டாளர்களை சந்தித்தார், எத்தனை கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சருடன் அரசு சார்பில் யார் யார் சென்றுள்ளனர் என்பதையும் கூற வேண்டும் என தெரிவித்தார்.
“தொழில்துறை அமைச்சர் இல்லாமல் முதலீட்டாளர்களை சந்திக்க சென்றதன் நோக்கம் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“தாம் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
















