ஆம்னி பேருந்துக்கு தனி பர்மிட், கட்டணம் நிர்ணயம் செய்ய அரசு மறுத்து வருவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் குற்றச்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள அவர், தனியார் BOOKING APPS இஷ்டம் போல் கட்டணம் நிர்ணயம் செய்கின்றன என்றும், புதிதாக வரும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தனியார் BOOKING APPS களில் ரூ.5000, 6000 என அதிக விலைக்கு டம்மி சார்டு போடுவதாகவும் சாடினார்.
இந்த டம்மி சார்டு போடுவதற்கு தனியார் புக்கிங் apps துணை போகின்றன என்றும், ஆனால் இதனை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தனியார் BOOKING APPS – யை கட்டுப்படுத்தாவிட்டால் பண்டிகை கால விலை உயர்வை எந்த காலத்திலும் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்,.
















