தமிழகக் காவல் துறையில் 29 ஆயிரத்து 108 புதிய பணியிடங்களை உருவாக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக காவல்துறையில் நிலவி வந்த கடும் ஆள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், 29 ஆயிரத்து 108 புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு, காவல் நிலையங்களின் தேவைக்கேற்ப கூடுதல் பணியிடங்கள் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய பணியிடங்கள் மூலம் காவலர்களின் பணிச்சுமை குறைவதுடன், காவல்-பொதுமக்கள் விகிதம் தேசிய சராசரியை விட உயரும்.
2024-ம் ஆண்டு தரவின்படி, தேசிய காவல்-பொதுமக்கள் விகிதம் 194.40 ஆக இருந்த நிலையில், தமிழகத்தில் 171.98 ஆக இருந்தது.
ஏற்கனவே சிங்கப்பெண் சிறப்புப் படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் படைக்காக 4 ஆயிரத்து 563 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில்,காவல் துறையை நவீனமயமாக்க 212 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
அதேபோல, பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய காவல் வாகனங்கள் வாங்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காவல் நிலையங்களின் அவசர நிர்வாகச் செலவுகளுக்கான மாதாந்திர நிதி 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
2026-27-ம் ஆண்டுக்கான காவல் துறை மானியக் கோரிக்கையில் 4 ஆயிரத்து 477.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தது.
















