அரசு முறைப் பயணமாக லண்டன் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்கு நடிகரும், ரேஸருமான அஜித்தை சந்தித்தார்.
முதலமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டனுக்கு 6 நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சில்வர்ஸ்டன் ரேசிங் சர்க்கியூட்டிற்கு நடிகரும், ரேஸருமான அஜித்குமாரை சந்திக்க சென்றார். அப்போது, அங்கு திரண்டிருந்த விஜய்யின் ரசிகர்கள் அவரைக் கண்டு ஆரவாரம் செய்தனர்.
முதலமைச்சர் ஜோசப் விஜய், அஜித்தை கண்டதும் மகிழ்ச்சியில் ஓடிச் சென்று அவரை ஆரத்தழுவினார். அப்போது இருவரும் பரஸ்பர முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, அஜித்குமாரின் ரேஸிங் குழுவுடன் முதலமைச்சர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கார் பந்தயம் குறித்து முதலமைச்சர் விஜயிடம், அஜித்குமார் விரிவாக விளக்கினார். அதனை முதலமைச்சர் விஜய் உன்னிப்புடன் கேட்டு தெரிந்துகொண்டார்.
தொடர்ந்து நடைபெற்ற நடிகர் அஜித்தின் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா கண்டு ரசித்தனர். அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த நிலையில், த்ரிஷாவும் அங்கு இருந்து போட்டியை கண்டு உற்சாகப்படுத்தினார். பந்தயத்தை இருவரும் கண்டு ரசித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.
















