கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், முதலமைச்சர் சதீஷனை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
கேரளத்தில் நள்ளிரவு நேரங்களில் அறிவிக்கப்படாமல் மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், முதலமைச்சர் சதீஷனை விமர்சிக்கும் வகையில் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
அரசு திட்டமிட்டே அறிவிக்காமல் மின்தடை செய்கிறதா என கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்கவும், மின்தடையை சரிசெய்யவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேட்டியளித்த பெண் ஒருவர், தான் கேரளத்தில் 8 வருடங்களாக வசிப்பதாகவும், இதுபோன்று அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு அவதிப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
















