பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் - நயினார் நாகேந்திரன் நன்றி!
Sep 13, 2026, 10:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 13, 2026, 09:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ராமேஸ்வரம் திருக்கோயில் பிரகாரத்தை முன்னிறுத்தி அதன் புகழை உலகறியச் செய்த  பிரதமர் நரேந்திர மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றி! தலைநகர் புதுதில்லியில் உலகப் பொருளாதாரத்தின் முன்னணி நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உச்சி மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் தொடங்கியுள்ளது.

சர்வதேச அரங்கில் பாரதத்தின் பெருமையும் செல்வாக்கும் விண்ணைத் தொட்டு நிற்கும் இவ்வேளையில், உலகத் தலைவர்களை வரவேற்கும் முதன்மை நுழைவு வாயிலில், தமிழகத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் பிரகாரத்தின் பிரம்மாண்டப் பின்னணியை அமைத்து, தமிழர்களின் கட்டிடக்கலையையும் ஆன்மிகப் பெருமையையும் உலக நாடுகளை வியந்து நோக்கச் செய்துள்ளார்  பாரதப் பிரதமர் மோடி.

ராமேஸ்வரம் திருக்கோயிலின் பிரகாரங்கள், உலகளவில் கட்டிடக்கலையின் ஈடுஇணையற்ற சாதனையாகப் போற்றப்படுபவை. சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலகின் மிக முக்கிய வல்லரசுத் தலைவர்களை இந்தப் பிரம்மாண்டப் பின்னணியில் நின்று கைகுலுக்கி வரவேற்றதோடு மட்டுமல்லாமல், அந்தப் பிரகாரத்தின் வரலாற்று மகத்துவத்தை அவர்களுக்குத் தாமே ஆர்வத்துடன் பிரதமர்

மோடி அவர்கள் விளக்கிய காட்சி, உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனையும் பெருமிதத்தில் திளைக்கச் செய்துள்ளது. தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழகக் கலாச்சாரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ள அளப்பரிய பற்றும் பாசமும் வாய்வார்த்தைக்கானது அல்ல; அது ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும் உண்மையான அன்பு என்பதை இச்சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.

இவ்வாறு தமிழகக் கலாச்சாரத்தையும், பெருமையையும் உலகத் தலைவர்களின் கண்களுக்குக் கொண்டு சேர்த்த பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு உலகத் தமிழர்களின் சார்பிலும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: nainar nagendran press meeteeuu bricsupi bricsputin bricspib bricsbrics paybrics 2026brics vs g7brics newsbrics livebricsmodi bricstamilnadu bjp state presidentbrics 2024nainar thanks to pmcbdc brics
Share
Tweet
SendShare
Previous Post

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

Related News

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies