டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி - சிறப்பு தொகுப்பு!
Sep 13, 2026, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 13, 2026, 12:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரிக்ஸ் கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, பிரேசில் டாலருக்கு மாற்று உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நிலையில், நாகரீகமான முறையில் புதிய நாணயப் புரட்சியை ஏற்படுத்த இந்தியா வலியுறுத்தி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பிரிக்ஸ் கூட்டமைப்பை “அமெரிக்க எதிர்ப்பு” என்று அழைத்ததோடு, டாலரைத் தவிர்க்கும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மீது அதிக வரிகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

தனது பிரிக்ஸ் உறுப்புரிமைக்கும், குவாட் மற்றும் ஜி7 உறவுகளுக்கும் இடையில் ஒரு சமநிலையைக் கடைப்பிடிக்கும் இந்தியா இதில் புதிய வியூகத்தை அமைத்துள்ளது. அது தான் மத்திய வங்கி டிஜிட்டல் நாணய (CBDC) திட்டமாகும்.

எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை மேலும் திறமையானதாக மாற்றுவதற்காக, உறுப்பு நாடுகளின் பணம் செலுத்தும் முறைகளுக்கு இடையே செயல்படுவதற்கு முக்கியத்துவம் அளித்த, 2025-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்தின் அடிப்படையில் இந்தியா இந்த முன்மொழிவை அளித்துள்ளது.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் மத்திய வங்கி, டிஜிட்டல் நாணயங்களை இணைப்பதற்கான முறையான முன்மொழிவை இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

இது நடந்தால் இத்தகைய ஒரு திட்டம் பிரிக்ஸ் தலைவர்களின் முன் நேரடியாக வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களை இணைப்பதிலும் பல்வேறு நாடுகளின் குழுவில் நிதி உள்கட்டமைப்பை ஒருங்கிணைப்பதிலும் நடைமுறை சிக்கல்களும் சவால்களும் உள்ளன.

நம்பகமான மாற்று ஏற்பாடுகள், பணப்புழக்கத்திற்கான காப்புறுதிகள், பொதுவான தீர்வுத் தரநிலைகள், உண்மையான இணக்கக் கட்டமைப்புகள், மற்றும் குவியும் நாணய இருப்புகளைக் கையாள்வதற்கான தெளிவான விதிகள் இல்லாமல் இந்தியாவின் முன்மொழிவை முன்னெடுத்து செல்வதிலும் சிரமங்கள் உள்ளன.

முன்னதாக பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கான ஒரே நாணயம் என்பதன் மூலம் டாலருக்கு மாற்றாக யுவானை மையமாகக் கொண்ட ஒரு நிதி பரிவர்த்தனையை உருவாக்கி தனது சொந்த செல்வாக்கை விரிவுபடுத்த சீனா விரும்புகிறது.

இதை ஒரு நாணயப் பிரச்சனையாகக் கருதாமல், பணம் செலுத்தும் பிரச்சனையாகக் கருதும் வரை, ஒரு உண்மையான பிரிக்ஸ் நாணயம் என்பது வெறும் பேச்சுப் பொருளாகவே இருக்கும். நடைமுறைக்கு வராது என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தப் பற்றாக்குறை 226 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில் பணப்பரிவர்த்தனை ஒருங்கிணைப்பு இந்தியாவின் ஏற்றுமதிகளுக்கு எந்தப் பயனும் தராமல், இறக்குமதிகளை இன்னும் எளிதாக்கிவிடும் என்றும் அதனால் வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயமும் உள்ளதாக கூறப் படுகிறது.

எனவே, டாலருக்கு ஒரேயொரு மாற்று என்று இல்லாமல் பல படிநிலைகளிலான ஒரு அடுக்கு அணுகுமுறையை இந்தியா உருவாக்க முயற்சி செய்கிறது.

டாலர் வலுவாக இருக்கும் இடங்களில் அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதும், வர்த்தகப் பரிமாற்றங்கள் அதிகமாகும் இடங்களில் உள்ளூர் நாணயத் தீர்வை விரிவுபடுத்துவதும் பணப்புழக்கத்தை நிர்வகிக்க மாற்று வழித்தடங்களை உருவாக்குவதும் என இந்தியா கவனமாகவே செயல்படுகிறது.

பிரிக்ஸ் டிஜிட்டல் நாணயங்களை இணைப்பதற்கான முதல் முறையான முன்மொழிவு, அது எச்சரிக்கையுடன் கூடியதாக இருந்தாலும், ஒரு உண்மையான முதல் படியாகும்.

Tags: BRICS currency.eeuu bricsupi bricsputin bricspib bricsbrics tradebrics paybrics venuebrics 2026brics chinabrics vs g7trump bricsbrics newsusa vs bricsbrics liveindia bricsIndiamodi bricsbrics indiabricsbrics 2024brics delhiBRICS summitcbdc brics
Share
Tweet
SendShare
Previous Post

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Related News

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies