ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு, முதன்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 43 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் அஸ்மத்துல்லா உமர்சாய் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்ததால், ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.
157 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், அபிஷேக் சர்மா 82 ரன்களும், இஷான் கிஷன் 42 ரன்களும் விளாசினர். இதனால் இந்திய அணி 13.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
















