சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? - சிறப்பு தொகுப்பு!
Sep 13, 2026, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 13, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச விவகாரங்களில் BRICS, G20 மற்றும் SAARC ஆகிய மூன்று அமைப்புகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. அவற்றுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் என்னென்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலகின் மிக சக்திவாய்ந்த பொருளாதாரக் கூட்டமைப்பான G20-ல் ஐரோப்பிய யூனியன், இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில் மற்றும் சவுதி அரேபியா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 19 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

1990-களின் பிற்பகுதியில் ஆசியாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியைத் தொடர்ந்து 1999-ல் G20 உருவானது. முக்கிய பொருளாதார சக்திகள் நிதிசார் கொள்கைகள் குறித்து விவாதிக்கவும், உலகளாவிய நிதி ஸ்திரத்தன்மையைப் பேணவும் ஒரு நிலையான அமைப்பு தேவைப்பட்டதால் அன்றைய காலகட்டத்தில் G20 உருவாக்கப்பட்டது.

கட்டாயமான விதிகளைக் கொண்ட சர்வதேச அமைப்புகளைப் போலன்றி, G20 என்பது நெகிழ்வுத்தன்மை கொண்ட ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு பொருளாதாரக் கொள்கைகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.

மேலும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பது, காலநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியை உள்ளடக்கிய விவாதங்களை முன்னெடுப்பது என செயல்படும் ஒரு முதன்மையான சர்வதேச தளமாக G20 உள்ளது.

தெற்காசியாவில் பிராந்திய ஒத்துழைப்புக்காக வங்கதேசத் தலைநகர் டாக்காவில் 1985-ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி SAARC சாசனம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் ஒரு உலகளாவிய அமைப்பு அல்லாமல் பிராந்திய அமைப்பாக SAARC உருவானது.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அண்டை நாடுகளை ஒன்றிணைக்கும் அமைப்பாக நேபாளத்தின் காத்மாண்டுவில் தலைமையகமாக கொண்டு SAARC செயல்படுகிறது.

தெற்காசியப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பரஸ்பர நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்தும் வகையில் பிராந்திய நலன், பொருளாதார வளம், சமூக-பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய கலாச்சார மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாக சார்க் அமைப்பு கொண்டுள்ளது.

‘குளோபல் சவுத்’ தில் வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகளின் சக்தியைக் கட்டியெழுப்பும் வகையில் அந்நாடுகளின் குரலாகச் செயல்படும் அமைப்பாக பிரிக்ஸ் உள்ளது.

ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை இந்த அமைப்பில் இருந்தாலும் பின்னர் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளும் இணைக்கப் பட்டுள்ளன.

உலக விவகாரங்களில் தங்கள் செல்வாக்கை அதிகரிப்பதற்காக வளர்ந்து வரும் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் ஒரு புவிசார் அரசியல் மையமாக பிரிக்ஸ் விளங்குகிறது

வெறும் மற்றொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைக் கூடமாக இல்லாமல் வர்த்தகம், நிதி சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு போன்ற உலகளாவிய பிரச்சினைகளில் வளரும் பொருளாதாரங்களின் நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு மன்றமாக பிரிக்ஸ் செயல்படுகிறது.

புதிய மேம்பாட்டு வங்கி போன்ற மாற்று அமைப்புகளை அங்கீகரிப்பதன் மூலம், பாரம்பரிய மேற்கத்திய தலைமையிலான IMF போன்ற நிதி அமைப்புகளிலிருந்து விலகி, சர்வதேச விவகாரங்களின் போக்கையே இந்தப் புதிய பிரிக்ஸ் கூட்டணி மாற்றுகிறது.

உலகளாவிய மற்றும் பொருளாதார ரீதியான G20 உலகளாவிய நிதிக் கொள்கைகளை ஒருங்கிணைக்கிறது என்றால் முற்றிலும் தெற்காசிய பிராந்தியத்துக்கான SAARC அண்டை நாடுகளுடனான ஒருங்கிணைப்பை நாடுகிறது. ஆனால் கண்டங்களுக்கு இடையிலான வளரும் நாடுகளை மையமாகக் கொண்ட BRICS பாரம்பரிய மேற்கத்திய ஆதிக்க உலக நிர்வாகத்திற்கு சவால் விடுகிறது.

Tags: pib bricsbrics paybrics 2026brics vs g7brics newsbrics livemodi bricsbrics 2024G20SAARCbricsupi brics
Share
Tweet
SendShare
Previous Post

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Related News

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies