சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோயம்பேடு சந்தையில் பூக்கள், பழங்கள் மற்றும் பூஜைப் பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது.
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று காலை முதலே பொதுமக்கள் அதிகளவில் சந்தையில் குவிந்து, மல்லி, முல்லை, சாமந்தி உள்ளிட்ட பூக்களையும், பல்வேறு பழங்களையும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
இதனுடன், தேங்காய், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், அவல், பொரி உள்ளிட்ட பூஜைப் பொருட்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. கடந்த நாட்களை விட இன்று விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்த நிலையில், நாளை காலை மேலும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















