ஜூனியர் ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கியில் தென் கொரியாவை வீழ்த்தி, இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த இறுதிப் போட்டியில், இந்திய அணியும், கொரிய அணியும் மோதின. இதில், இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அஜீத் யாதவ், அன்மோல் எக்கா, பிரப்தீப் சிங், அஷு மவுரியா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். கொரிய அணி ஒரே ஒரு கோல் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் இந்திய அணி, 4க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், ஜூனியர் உலகக்கோப்பைக்கு இந்திய ஆடவர் அணி தகுதி பெற்றது.
















