மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா 68 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 59 ரன்களும் விளாச, இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 184 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியால், 20 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணியில் ஸ்ரீசரணி 4 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 8-வது முறையாக மகளிர் ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் 2024-ம் ஆண்டு இறுதிப்போட்டியில், இலங்கையிடம் அடைந்த தோல்விக்கும் இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது.
















