மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தவெக, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்நிலையில், நாதக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் ஜானகிராம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
தாராபுரம் தொகுதியில் கார்த்திகா வேட்பாளராக களம் காண்கிறார்.
புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதியில் கார்த்திக் குமாரி போட்டியிடுகிறார்.
















