பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது என ராகுல்காந்திக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டில் தலைவர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. அதில், நாடு முழுவதும் உள்ள பிராந்திய உணவுகளை வகைப்படுத்தும் வகையில், சைவ உணவுகள் மெனு பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இதனை சமூக வலைதளங்களில் விமர்சித்திருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் 80 சதவீத இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள் என்று கூறியிருந்தார். அவருக்கு பதலிளித்துள்ள நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிரிக்ஸ் தலைவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவுப் பட்டியலிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வதை நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார். பல்வேறு பிராந்திய மரபுகளை கொண்ட சுவை மற்றும் சத்துக்கள் நிறைந்த இந்திய சைவ உணவுகளை, விருந்தினர்கள் மிகவும் ரசித்து சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
















