பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அருவி, இந்தியாவில் புகழ் பெற்ற சுற்றுலாத்துறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் நீரூற்று மலையடிவாரத்தை அடைகிறது. இதனால், இந்த அருவி, கும்பக்கரை அருவி என அழைக்கப்படுகிறது.
கும்பக்கரை நீர்வீழ்ச்சிப் பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி தவிர தண்ணீர் செல்லும் வழித்தடங்களில், வழுக்குப் பாறை, யானைக் கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம் போன்ற பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக, இந்த அருவியில், நீர்வரத்து வழக்கத்தைவிட அதிக அளவில் இருந்தது. மேலும், அபாயக் கட்டத்தைத் தாண்டி தண்ணீர் விழுந்தது. இதனால், அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர்.
இந்த நிலையில், அருவியில் நீர்வரத்து சீரானதால், கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதியளித்துள்ளனர்.
இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.