இந்தியர்கள் என்றால் அடிமைகள் என்று அர்த்தம். மகாபாரத காலத்தில் இருந்தே பாரதம் என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆகவே, நாம் இந்தியர்கள் அல்ல, பாரதீயர்கள் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கிறார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வெளிநாட்டுத் தலைவர்களுக்கான விருந்து அழைப்பிதழ், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேஷியா பயண அழைப்பிதழ் ஆகியவற்றில் “இந்தியா” என்று குறிப்பிடுவதற்கு பதிலாக “பாரத்” என்று அச்சிடப்பட்டிருந்தன. உடனே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்தியாவை பாரதம் என்று பெயர் மாற்றம் செய்ய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வதந்திகளை பரப்பி விட்டன.
அதேசமயம், பாரத் என்கிற பெயர் மாற்றத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்தது. அரசியல் தவிர்த்து நாட்டிலுள்ள பிரபலங்கள் பலரும் பாரத் என்கிற பெயருக்கு ஆதரவு தெரிவித்து தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் உள்ளிட்டோர் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.
அந்த வரிசையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தும் இணைந்திருக்கிறார். இது குறித்து கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பதிவில், “இந்தியா என்கிற பெயரை நேசிக்க அதில் என்ன இருக்கிறது? ஆரம்ப காலக்கட்டத்தில் பிரிட்டிஷாரால் ‘சிந்து’ என்று உச்சரிக்க இயலவில்லை. எனவே, ‘இண்டஸ்’ என்று வைத்தார்கள். இதன் பிறகு ‘இந்து’ என்றும் ‘இந்தோ’ என்றும் மாற்றமடைந்து ‘இந்தியா’ என்று மாறியது.
What is there to love in this name? First of all they couldn’t pronounce ‘Sindhu’ toh usko bigad ke ‘ Indus’ kar diya. Phir kabhi Hindos kabhi Indos kuch bhi gol mol karke India bana diya.
From the time of Mahabharata, all the kingdoms who participated in the Great War of… https://t.co/R11hrMcjbH— Kangana Ranaut (@KanganaTeam) September 5, 2023
மகாபாரத காலத்திலிருந்தே குருஷேத்ர யுத்தத்தில் பங்கேற்ற அனைத்துப் பேரரசுகளும், பாரதம் என்னும் ஒரே கண்டத்தின் கீழ் இருந்தன. ஆனாலும், நம்மை ஏன் அவர்கள் “இந்து” என்றும் “சிந்து” என்றும் அழைத்தனர்? மேலும், பாரத் என்கிற பெயர் மிகவும் அர்த்தம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால், இந்தியா என்ற பெயருக்கு என்ன அர்த்தம்?
ஆங்கிலேயர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டினரைச் “சிவப்பு இந்தியர்கள்” என்று அழைத்ததை நான் அறிவேன். ஏனென்றால், பழைய ஆங்கிலத்தில் இந்தியன் என்றால் அடிமை என்று அர்த்தம். எனவேதான், ஆங்கிலேயர்கள் நமக்கும் இந்தியர்கள் என்று பெயரிட்டனர். அது ஆங்கிலேயர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட அடையாளம். பழைய அகராதிகளில் கூட இந்தியன் என்றால் அடிமை என்று இருந்தது. தற்போதுதான் அதனை அவர்கள் மாற்றினார்கள். மேலும், இது நமது பெயரல்ல. நாம் இந்தியர்கள் அல்ல, பாரதீயர்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.