மதவெறி பிடித்த பிரிவினைவாதி, காலாவதியான திரைப்பட இயக்குநர் அமீரை பிரிவினைவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என இந்து முன்னணி அரசை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதவெறி பிடித்த பிரிவினைவாதி காலாவதியான இயக்குநர் அமீரை பிரிவினைவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இஸ்லாமிய அடிப்படைவாத மனநிலையில் சுற்றித் தெரியும் காலாவதியான இயக்குனர் அமீர், பாரத திருநாட்டிற்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். தொடர்ந்து, இந்து மத வெறுப்பு பேச்சுகளையும், மொழிவெறியையும் தூண்டி வருகிறார்.
இந்த நிலையில், வாட்ஸ் அப்பில் ஆடு அமீர் இந்திய நாட்டிற்கு பாரத நாடு காவி நாடு எப்படி வேணா பேர் வைத்துக் கொள்ளுங்கள், இது தனி தமிழ்நாடு, எங்க நாடு தமிழ்நாடு தான். இந்தியா கிடையாது என்று பகிர்ந்துள்ளார்.
எனவே, மத்திய அரசும், மாநில அரசும் தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாத தடுப்புச் சட்டத்தில், திரைப்பட இயக்குநர் அமீரை கைது செய்ய வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.