அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு மலையேற்றம் செல்லும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம், மரக் குச்சிகளை விநியோகம் செய்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.
TTD அறக்கட்டளை வாரியத் தலைவர் பூமனா கருணாகர ரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி எ.வி. தர்மா ரெட்டி ஆகியோர் புதன்கிழமை அலிபிரி பாதலா மண்டபத்தில் பக்தர்களுக்கு குச்சிகளை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கினர். கடந்த மாதம் சிறுத்தை தாக்கி ஆறு வயது சிறுவனின் உயிரை பறித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பூமனா, வன விலங்குகளின் தாக்குதலுக்கு எதிராக பக்தர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் தற்காப்புப் பயிற்சியின் ஒரு பகுதியே இது. மேலும் இரண்டு சிறுத்தைகளின் நடமாட்டம் கேமராக்கள் மூலம் படம்பிடிக்கப்பட்ட நாளில் TTD சேர்மன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
காட்டு விலங்குகளின் தாக்குதலைத் தடுக்க TTD யின் முயற்சிகளைப் பற்றி பூமனா குறிப்பிடுகையில், “பக்தர்களின் பாதுகாப்புக் கருத்தி குழுக்களாக பக்தர்களை அனுப்பி அவர்களுடன் காவலர்களும் அனுப்பப்பட்டன, மேலும் காட்டு விலங்குகள் இருக்கும் பகுதிகளில் காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் நான்கு சிறுத்தைகளை பிடிக்க உதவியுள்ளது” என்று கூறினார்.
ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவிலுக்கு வந்த பிறகு பக்தர்களிடமிருந்து மரக் குச்சிகள் திரும்பப் பெறப்படும். யாத்திரையின் போது ஒவ்வொரு பக்தரும் பாதுகாப்பாக உணருவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம், என்று TTD தலைவர் வலியுறுத்தினார்.
சிறுத்தைகள் நடமாடியது குறித்து தர்மா ரெட்டி கூறுகையில், “ஏழாவது மைல் பாயின்ட் மற்றும் சிலாதோரணம் அருகே இரண்டு பெரிய பூனைகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு இடங்களிலும் விலங்குகளைப் பிடிக்க கூண்டுகள் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன.
இதையொட்டி, அலிபிரி நடைபாதையில் பாதுகாப்புப் பணியாளர்களுடன் பக்தர்கள் குழுவாகச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஒளிபரப்பு அமைப்பு மூலம் வனவிலங்கு செயல்பாடு குறித்து பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையும் 100 பணியாளர்களை நியமித்துள்ளது, என EO விளக்கினார்.
இதற்கிடையில், ஒதுக்கப்பட்ட வன மண்டலத்தில் வரும் அலிபிரி நடைபாதையில் இரும்பு வேலி அமைப்பதற்கான பரிந்துரைகளை TTD இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் மத்திய வன அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.