ஆந்திராவில் எதிர்பார்த்தைவிட அதிக அளவு தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், கிலோ ரூ.4 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள அன்னமய்யா பகுதி ஆசியாவில் மிகப்பெரிய தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தமிழகம், கர்நாடகம், மும்பை, ஒரிசா மற்றும் டெல்லி என பல்வேறு மாநிலங்களுக்கும் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தக்காளி வரத்து மிகவும் குறைந்து போனதால், தக்காளி விலை கிலோ ரூ.200-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதனால், தக்காளி விவசாயிகள் பலர் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறினார்கள்.
ஆனால், பொதுமக்கள் பலர் தங்களது சமையலில் தக்காளி பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டனர். அந்த அளவு தக்காளியின் தாக்கம் அதிக அளவு இருந்தது.
தற்போது, அன்னமய்யா பகுதிகளில் தக்காளி அதிகளவு உற்பத்தி அதிகரித்து, மார்க்கெட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, புங்கனூர், சித்தூர், பலமனேர் பகுதிகளில் இருந்தும் அதிகளவு தக்காளி வரத்தொங்கியுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வரை 80 டன்னுக்கும் குறைவாக இருந்த வரத்து தற்போது தினமும் 400 டன்னுக்கு மேல், வரத்தொடங்கியுள்ளது. இதனால், தக்காளி தற்போது கிலோ வெறும் ரூ.4 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்னும் ஒரு சில பகுதிகளில் தக்காளி தற்போது காய்களாக உள்ளன. அவை 2 வாரத்தில் பழமாக மாறிவிடும். அப்போது, தினமும் 1,000 டன்களைத் தாண்டும் என்கின்றனர். இதனால், தக்காளி விலை மேலும் குறையும் என்கின்றனர்.
தக்காளி விலை மிகவும் குறைந்துபோனதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.