தாத்தாவும் தந்தையும் இல்லையென்றால் உதயநிதி யார்? என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இன்றைய “என் மண் என் மக்கள்” பயணம், என்றும் தேசிய சிந்தனையில் பயணிக்கும் வீரம் விளைந்த உசிலம்பட்டி மண்ணில் இனிதே நடந்தேறியது. குற்றப் பரம்பரை சட்டம் என்னும் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய வீரமிக்க மக்கள் நிறைந்த மண் இது.
தென்னிந்தியாவின் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்படும் பெருங்காமநல்லூர் படுகொலை, ஆங்கிலேயர்களால் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு. தங்கள் சுய மரியாதையையும் வீரத்தையும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று போராடிய 17 பேர் உயிர்த்… pic.twitter.com/W6yrj7uwkn
— K.Annamalai (@annamalai_k) September 7, 2023
குற்றப் பரம்பரை சட்டத்துக்கு எதிராகப் போராடி, நான்கு ஆண்டுகள் சிறையில் கழித்தார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தனது தொடர் போராட்டத்தின் மூலம், குற்றப் பரம்பரை சட்டத்தை நீக்க வைத்தவர் தேவர் ஐயா.
தனது சொத்துக்களை ஏழை எளிய மக்களுக்காகக் கொடுத்தவர். இந்தியாவில் இரண்டு பேருக்குத் தான் ஆங்கிலேயர்கள் வாய்ப்பூட்டுச் சட்டம் இட்டார்கள். பசும்பொன் தேவர் ஐயா மற்றும் பால கங்காதர திலகர்.
அவரது அரசியல் வாரிசானக் கல்விச் செம்மல் ஐயா மூக்கையாத் தேவர் கச்சத் தீவை தாரை வார்த்ததை எதிர்த்து, பாராளுமன்றத்தில், என்னுடைய தொகுதியில் உள்ள கச்சத் தீவு தமிழகத்தின் பகுதி.
இதனைத் தாரைவார்க்கும் காங்கிரஸ் கட்சியினர் தமிழினத் துரோகிகள் என்றவர். 25 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிபெற்றவர். அத்தகைய தலைவர்கள் வாழ்ந்த மண் இது. அந்தக் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுகவும் தமிழினத் துரோகிகள்தான்.
உசிலம்பட்டியில், தேவர் ஐயா மற்றும் ஐயா மூக்கையா தேவர் ஆகியோர் வரிசையில், நேதாஜிக்கும் சிலை அமைக்க, தமிழக பாஜக முயற்சிகள் மேற்கொள்ளும்.
தென்னிந்தியாவின் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்படும் பெருங்காமநல்லூர் படுகொலை, ஆங்கிலேயர்களால் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு.
தங்கள் சுய மரியாதையையும் வீரத்தையும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று போராடிய 17 பேர் உயிர்த் தியாகம் செய்தவர்களின் வாரிசுகளான நாம், வெள்ளையர்களுக்குப் பின் வந்த இந்த திமுக கொள்ளையர்களை விரட்ட வேண்டும். நமது சனாதன தர்மத்தை அழிப்போம் என்கிறார் அமைச்சர் உதயநிதி.
தாத்தாவும் தந்தையும் இல்லையென்றால் உதயநிதி யார்? உதயநிதி அவர்களுக்கு, மதுரை மீனாட்சி அம்மனை அவதூறாகப் பேசிய திமுக தலைவர் அண்ணாதுரை அவர்களை, முத்துராமலிங்கத் தேவர் ஐயா எச்சரித்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த மண் ஆன்மீக மண். இங்கே உங்கள் வெறுப்புப் பிரச்சாரம் செல்லாது.
இதுவரை, திமுக உசிலம்பட்டி தொகுதியில் ஜெயித்ததே இல்லை என்பதுதான் இந்த மக்களின் பெருமை. முத்துராமலிங்கத் தேவர் ஐயா, மூக்கையா தேவர் ஐயா வரிசையில் வைக்கும் அளவுக்கான தகுதி நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மட்டும்தான் உள்ளது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், என்றும் தேசியத்தின் பக்கமே நின்று, பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.