திமுக இந்த சமூகத்திற்கு பிடித்திருக்கும் நோய், இவர்கள் அகற்றப்படவேண்டும், இந்த நாட்டிலிருந்த ஒழிக்கப்படவேண்டியது DMK என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”என் மண் என் மக்கள்” பயணம், ஜீவநதியான வைகை நதி உற்பத்தியாகும் வருசநாடு மலை அமைந்திருக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பூமியான ஆண்டிப்பட்டியில், பெரும் மக்கள் திரள் சூழ சிறப்புடன் நடந்தேறியது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா அம்மா இருவரையும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுத்த தொகுதி. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பூமி இது.
திமுக ஆட்சிக்கு வந்ததும், பேபி அணையைப் பழுது பார்த்து, பின்பு முல்லைப்பெரியாறு நீர்மட்டம் உயர்த்துவோம். பழுதுபார்க்கும் வேலையை தொடங்கிவிட்டோம் என்று இங்கிருந்து 4 மேஸ்திரிகளை அழைத்துக் கொண்டு சென்ற ஆண்டு சென்றார்களே, பழுதுபார்த்துவிட்டார்களா? இப்படி பொய்யை மட்டுமே பேசிக்கொண்டு…
— K.Annamalai (@annamalai_k) September 8, 2023
இங்கு இருக்கும் வருசநாடு மலையில் இருந்து தான் வைகை நதி உருவாகி மதுரை மாவட்டத்திற்கு ஜீவநதியாக வருகிறது. இதுவரை கண்டறியப்பட்ட நடுகற்களிலேயே மொழி கலப்பில்லாத, 2000 ஆண்டுகள் பழமையான சங்க கால கல்வெட்டுக்கள் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பழம்பொருட்கள் ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆண்டிபட்டி சுற்றியுள்ளக் காளவாசல் பகுதிகளில் மாதம் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரை செங்கல்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து தமிழகம் மற்றும் கேரளாவுக்கு செங்கல் அனுப்பப்படுகிறது.
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் சேலை, வேட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைவரும் பயன்பெறும் வண்ணம் ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் கடந்த 2008- 2009ம் ஆண்டு ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வணிக வளாகம் தற்போது வரை திறக்கப்படாமல் பயன்பாடு இன்றி உள்ளது.
இங்குள்ள கூடலூர் மங்கலதேவி/ கண்ணகி கோவில் ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 15,000க்கும் மேற்பட்ட மக்கள் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துக் கொள்வதாகக் கண்ணகி கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
1817இல் நடத்தப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியின் சர்வே ஆவணத்திலும் 1833இல் பதிவு செய்யப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கெசட்டிலும் உள்ள குறிப்புக்கள் மூலம் கண்ணகி கோவில் அமைந்துள்ள இடம் தமிழ்நாட்டிற்குச் சொந்தமான இடம்.
1982இல், கேரளாவில் பெரியார் புலிகள் காப்பகம் உருவாகிறது. அதனால், வனப்பகுதிக்குள் உள்ள கண்ணகி கோவிலுக்குச் சென்று வர கேரளா அரசாங்கம் ஒரு பாதையை உருவாக்குகிறது.
பின்னர் கோவிலைப் பராமரிக்கும் பணியை 1983இல் கேரள அரசு எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் உள்ள புளியன்குடி மலைப்பாதையைச் சீரமைத்து வாகனங்களை இயக்கவேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை இன்று வரை நிறைவேற்றாமல் இருக்க என்ன காரணம்? வாசுதேவநல்லூரில் உள்ள செண்பகவல்லி அணையை கேரளா அபகரித்து கொண்டது போல இங்கு கூடலூர் கண்ணகி கோவிலையும் அபகரித்து கொண்டுள்ளது.
2011ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டை ஒரு காட்டுமிராண்டி விளையாட்டு என்று சொன்னது திமுக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான அன்றைய மத்திய அரசு. ஜல்லிக்கட்டை மீட்டு கொடுத்தது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.
திமுக தாங்கள் செய்த பாவத்தை நிவர்த்தி செய்ய, வாக்குறுதி எண் 373. ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்க 1000 ரூபாய் மாதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் இன்று வரை கொடுக்கவில்லை.
மோடியின் முகவரி: ஆண்டிபட்டி
One Rank One Pension என்ற ராணுவ வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நமது பாரத பிரதமர் நிறைவேற்றியதன் மூலம் பயன்பெற்ற ஒருவர் கண்ணன், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற அருள்செல்வன், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற அழகுமலை, தமிழகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு பெற்ற பாலுசாமி, செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பெருமாள் சாமி. இவர்கள்தான் பாரதப் பிரதமர் மோடியின் முகவரி.
திமுக ஆட்சிக்கு வந்ததும், பேபி அணையைப் பழுது பார்த்து, பின்பு முல்லைப்பெரியாறு நீர்மட்டம் உயர்த்துவோம். பழுதுபார்க்கும் வேலையைத் தொடங்கிவிட்டோம் என்று இங்கிருந்து 4 மேஸ்திரிகளை அழைத்துக் கொண்டு சென்ற ஆண்டு சென்றார்களே, பழுதுபார்த்துவிட்டார்களா? இப்படி பொய்யை மட்டுமே பேசிக்கொண்டு சுத்தும் திமுகவை மக்கள் கேள்வி கேட்டால், திசை திருப்ப இந்து வெறுப்பு பிரச்சாரம் செய்து மடைமாற்றுவார்கள்.
தெய்வதிருமகனார் தேவர் ஐயா, சாமி இல்லேன்னு சொல்ற பயலுகள் எல்லாம் எதுக்காக கோவிலுக்குள் வந்து பேசுறான்கள் என்று கர்ஜித்தார். இன்று அவர் இருந்திருந்தால், திமுகவினர் இப்படி இந்து மத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்திருக்க மாட்டார்கள்.
சனாதனத்தை ஒழிப்போம் என்று சொன்னால், பசும்பொன் தேவர் மீண்டும் பிறந்து வந்து திமுகவினரை உரிய இடத்தில் நிறுத்தியிருப்பார். திமுக இந்த சமூகத்திற்கு பிடித்திருக்கும் நோய்.
இவர்கள் அகற்றப்படவேண்டும். இந்த நாட்டிலிருந்த ஒழிக்கப்படவேண்டியது DMK என்ற டெங்கு மலேரியா கொசு தான். விரைவில் பொதுமக்கள் இந்த நோயை அகற்றுவார்கள்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் தலைமையிலான மத்திய அரசு, மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கப் போவது உறுதி. தமிழகமும் அதில் பெரும்பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை எனத் தெரவித்துள்ளார்.