தமிழகத்தை கஞ்சா தலைநகரமாக மாற்றிய மு.க. ஸ்டாலின், தமிழகத்தின் கஞ்சா தலைநகரமாக கம்பத்தை மாற்றி வைத்திருக்கிறார் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம் ”என் மண் என் மக்கள்” பயணத்தின் முதல் பகுதி, சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கம்பராயப் பெருமாள் கோவில் அமைந்திருக்கும் கம்பம் நகரில், சிறப்பாக நடந்தேறியது.
முரண்பாடுகளின் மொத்த உருவம் திமுக. சாராய ஆலைகள் நடத்திக்கொண்டு டாஸ்மாக் மூடுவோம் என்று பொய்யான தேர்தல் வாக்குறுதி கொடுப்பார்கள். இந்தி மொழியை பயிற்றுவிக்கும் பள்ளிகளை நடத்திக்கொண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்துவார்கள். 2010ஆம் ஆண்டு நீட் தேர்வைக் கொண்டு வந்துவிட்டு, அதற்கு… pic.twitter.com/nVlr7jSLRE
— K.Annamalai (@annamalai_k) September 8, 2023
பெருமாளையும் சிவனையும் ஒரே இடத்தில் வழிபட வேண்டும் என்று நினைத்த விசுவநாத நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த திருக்கோவில் நகரில், பெரும் திரளெனக் கூடியிருந்த பொதுமக்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார்1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. இதனை அங்கீகரிக்கும் வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கம்பம் பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது நமது மத்திய அரசு.
இத்தகைய செழிப்பான பூமியை, ஒரு குப்பைக் கிடங்குப் போல பயன்படுத்தி வருகிறது கேரளா. அதைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் ஊழல் முதல்வர் முக ஸ்டாலின். கூட்டணி மட்டும் தான் முக்கியம். நம் மாநில மக்கள் பாதிக்கப்பட்டாலும் ஊழல் முதல்வர் முக ஸ்டாலினுக்கு எந்த கவலையும் இல்லை. குப்பைகளை இங்கே வந்து கொட்ட கம்பம் ஒன்றும் குப்பை தொட்டி இல்லை என்பதை முதலமைச்சருக்கு உணர வைக்க வேண்டும்.
அச்சன்கோவில்-பம்பா-வைப்பாறு நதி நீர் இணைப்பு திட்டம் நீண்ட நெடுங்காலமாக பேசப்பட்டு வரும் திட்டமாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் நோக்கி ஓடி கடலில் கலக்கும் அச்சன்கோவில் மற்றும் பம்பா நதிகளின் உபரி நீரில் 20 சதவீதத்தை, மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு அடிவாரத்தில் செங்கோட்டையை அடுத்துள்ள மேக்கரைக்கு கொண்டு வந்து வைப்பாறுக்கு திருப்புவதுதான் இத்திட்டமாகும்.
இந்தத் திட்டம் நிறைவேறினால், ஆண்டிற்கு 1114 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கவும் வாய்ப்பு ஏற்படும். தேனி மாவட்டம் வருசநாடு மலையில் இருந்து வைப்பாறு நதி உருவாகிறது. ஆனால் வைப்பாறு நதியில் உபரி நீர் கலப்பதைக் கூட விரும்பாத கேரளா கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தை நிறைவேற்ற ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.
சென்னையில் அரண்மனையில் இருக்கும் அவருக்கு தென் மாவட்ட விவசாய மக்களின் வலி எப்படித் தெரியும்?
கம்பம் திமுக சட்டமன்ற உறுப்பினரும், எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து எந்த நிதியும் இதுவரை ஒதுக்கீடு செய்யவில்லை. அடிப்படை வசதிகளுக்காக எவ்வித நிதி ஒதுக்கீடு செய்யாத நீங்கள், பலமுறை தங்களிடம் மனு கொடுத்தும் தங்கள் வீட்டுக்கு வந்து மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத எம்எல்ஏ நீங்கள், எந்த முகத்தோடு எங்கள் ஊருக்கு வருகை தந்தீர்கள் என்று பொதுமக்களால் முற்றுகையிடப்படும் அளவில்தான் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் இருக்கிறார்.
தமிழகத்தை பாரத நாட்டின் கஞ்சா தலைநகரமாக மாற்றிய முக ஸ்டாலின், தமிழகத்தின் கஞ்சா தலைநகரமாக கம்பத்தை மாற்றி வைத்திருக்கிறார். கேரளா மக்களே “கஞ்சா என்றால் அது கம்பம் கஞ்சா தான்” என்று சொல்லும் அளவுக்கு இங்கு கஞ்சா பயிரிட்டு விற்பனை ஆகிறது. இது திமுக அரசுக்கும் இந்த ஊர் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனுக்கும் தெரியாமலா நடக்கிறது?
தேசிய கோகுல் மிஷன் என்பது நமது பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், கால்நடை வாங்க, பராமரிக்க மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதுவரை தமிழகத்திற்கு சுமார் 500 கோடி ரூபாய் நமது மத்திய அரசு வழங்கியுள்ளது. ராமகிருஷ்ணன் மாதிரி திமுக ஆட்கள், இது திமுகவின் திட்டம் என்று ஸ்டிக்கர் வேண்டுமானால் ஒட்டுவார்களே தவிர, வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள்.
முரண்பாடுகளின் மொத்த உருவம் திமுக. சாராய ஆலைகள் நடத்திக்கொண்டு டாஸ்மாக் மூடுவோம் என்று பொய்யான தேர்தல் வாக்குறுதி கொடுப்பார்கள். இந்தி மொழியை பயிற்றுவிக்கும் பள்ளிகளை நடத்திக்கொண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்துவார்கள்.
2010ஆம் ஆண்டு நீட் தேர்வைக் கொண்டு வந்துவிட்டு, அதற்கு எதிராக இவர்களே போராடுவார்கள். 25 முதல் 30 லட்ச ரூபாய் நன்கொடை வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகளை நடத்திக்கொண்டு, மேடை ஏறி, ஏழை எளிய மாணவர்கள் படிக்கவேண்டும் என்று சொல்வார்கள்.
2011ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டை தடை செய்துவிட்டு, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராடுவார்கள். மீத்தேன் திட்டத்தை கொண்டுவந்த பிறகு அதற்கு எதிராகப் போராடுவார்கள். காவேரி நதியில் தமிழகத்திற்கு இருந்த உரிமையை தாரை வார்த்துவிட்டு காவேரி நதி நீர் வரவில்லை என்று போராடுவார்கள்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், டெங்கு மலேரியா கொசு எனும் மக்கள் விரோத திமுக கூட்டணியை மொத்தமாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஊழலற்ற நல்லாட்சி மூன்றாவது முறையாக மீண்டும் தொடரச் செய்வோம், எனத் தெரிவித்துள்ளார்.