இந்தியா நடத்தும் ஜி-20 உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு வருகை தரும் உலக தலைவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பினை அளித்து வருகிறார்.
ஒடிசாவின் புகழ்பெற்ற கோனார்க் கோயிலின் சக்கரத்தின் புகைப்படம் பின்னணியில், இருக்கும் இடத்தில் பிரதமர் தலைவர்களை வரவேற்கிறார்.
பாரத் மண்டபம் வந்த அர்ஜெண்டினா அதிபர் அல்பர்டோ பெர்னாண்டஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடோ, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பெனிஸ், ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவி உர்சுலா வென் வெ லியன், ஐரோப்பிய கவுன்சில் அமைப்பின் தலைவர் சார்லஸ் மைகில், ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கால்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலொனி, ஜப்பான் பிரதமர் பிமுஷி கிஷிடா, தென்கொரிய அதிபர் யோன் சுக் யெலோ, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமப்சொ, துருக்கி அதிபர் எர்டோகன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோ, இந்தோனேசிய அதிபர் ஜொகொ விடோடோ, பிரேசில் அதிபர் லிசி இனசியோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
உலகத் தலைவர்களை வரவேற்றப் பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுடன் தனித்தனியாகப் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.