நாடு முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்ட விரோத பணப் பறிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை நடத்தினர் .
இதன் அடிப்படையில் பல்வேறு இடங்களிலும் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல் – குவைதா உள்ளிட்ட தீவிரவாத இயங்களுக்கு ஆள் சேர்ப்பு மற்றும் நிதி திரட்டுவது உள்ளிட்டக் குற்ற செயல்கள் நடைபெற்று வருவதாக மத்திய உளவுத்துறை கண்டறிந்துள்ளது.
குறிப்பாக, இராமேஸ்வரத்தில் உள்ள இந்து கோவில்களை அடுத்த ஆண்டிற்குள் தகர்க்க வேண்டும் என அல் – குவைதா என்ற தீவிரவாத இயக்கத்தினர் ரகசியிமாக திட்டமிட்டுள்ளனர். இதற்காக, இளைஞர்கள் சிலரை மூளைச் சலவை செய்துள்ளனர். அது தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு அதிகாரிகள் தங்களது கவனத்தை இராமநாதபுரம் மாவட்டம் பக்கம் திருப்பியுள்ளனர்.
தேசிய புலனாய்வு அதிகாரிகளின் அதிரடி சோதனையில் யூசுப் என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ஆவணங்களைப் பரிசோதனை செய்தனர்.
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு சட்ட விரோத பணப் பறிமாற்றம் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் முஸ்லீம் சமுதாய இளைஞர்கள் மூளைச் சலவைச் செய்யப்பட்டு, தீவிரவாத இயங்களுக்கு ஆள் அனுப்பிவைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயுதப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகளின் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.