சந்திரயான்-3 லேண்டர்: புகைப்படம் எடுத்த சந்திரயான்-2 ஆர்பிட்டர்!
Jan 14, 2026, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான்-3 லேண்டர்: புகைப்படம் எடுத்த சந்திரயான்-2 ஆர்பிட்டர்!

எக்ஸ் தளத்தில் வெளியிட்டு மகிழ்ந்த இஸ்ரோ!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 9, 2023, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை உறக்க நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. இதை இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தை செப்டம்பர் 6-ம் தேதி தரையிறக்க முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்தது. எனினும், சந்திரயான்-2-ன் ஆர்பிட்டர் கடந்த 4 ஆண்டுகளாக நிலவை சுற்றி வந்துகொண்டுதான் இருக்கிறது. இது அவ்வப்போது புகைப்படங்களையும் எடுத்து அனுப்பி வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் ஆய்வு மேற்கொண்டு வந்தன. இந்த சூழலில், தற்போது நிலவில் சூரியன் மறைந்து இருள்சூழத் தொடங்கி இருக்கிறது. எனவே, லேண்டரும், ரோவரும் உறக்க நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை மீண்டும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், சந்திரயான்-2 ஆர்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான்-3 விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறது. அதில், கடந்த 6-ம் தேதி சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் (DFSAR) கருவி, சந்திரயான்-3 லேண்டரை புகைப்படம் எடுத்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

Chandrayaan-3 Mission:
Here is an image of the Chandrayaan-3 Lander taken by the Dual-frequency Synthetic Aperture Radar (DFSAR) instrument onboard the Chandrayaan-2 Orbiter on September 6, 2023.

More about the instrument: https://t.co/TrQU5V6NOq pic.twitter.com/ofMjCYQeso

— ISRO (@isro) September 9, 2023

 

Tags: Chandrayaan 3photoChandrayaan-2vikram lander
ShareTweetSendShare
Previous Post

உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோவிலில் சாய்னா நேவால் தரிசனம்!

Next Post

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் ஜோகோவிச்!

Related News

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies