2023 ஆசியக் கோப்பை போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இன்று இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இதில், வங்காளதேசம் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆசியக் கோப்பை 2023 போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டம் இலங்கையில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் மோதுகின்றன. முதலில் பேட் செய்து வரும் இலங்கை அணி 36 ஓவரில் 161 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இலங்கை அணி இதுவரை 6 முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பையிலும் இலங்கை அணி வெற்றி பெற்று நடப்பு சாம்பியனாக உள்ளது. ஆனால், வங்காளதேச அணி இதுவரை ஆசியக் கோப்பையை வென்றதே இல்லை. இருப்பினும் 3 முறை இறுதிப் போட்டி வரை முன்னேறி இருக்கிறது.
இந்தப் போட்டியின் லீக் சுற்றில் இலங்கை அணி மோதிய 2 போட்டியிலும் அந்த அணியே வென்றுள்ளது. அதேசமயம், வங்காளதேச அணி போட்டியிட்ட 3 போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.
இதற்கு முன்பு நடந்த இலங்கை – வங்கதேச அணிகள் மோதிய போட்டியில் இலங்கை அணியே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.