அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்காவை வீழ்த்தி, கோகோ காஃப் முதன் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகா காஃப் ஆகியோர் மோதினார். இதில் முதல் செட்டை சபலென்கா 6-2 என வென்றார். இதையடுத்து, கோகோ காஃப் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
40 நாட்களில், கோகா காஃப் தனது 19 போட்டிகளில் 18 போட்டிகளை வென்றுள்ளார். இதில் 3 பெரிய பட்டங்களும் உள்ளது. மேலும், ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வாஷிங்டன் ஓபன் மற்றும் சின்சினாட்டி ஓபன் போட்டிகளையும் வென்றுள்ளார். இதன் மூலம் இந்த நூற்றாண்டில் அமெரிக்க ஓபன் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் அமெரிக்க இளம்பெண் மற்றும் ஒட்டுமொத்தமாக 3-வது பெண்மணி என்னும் புகழை பெறுகிறார்.
கோகோ காஃப் பிறப்பதற்கு முன்பு 1999-ல் அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் இந்த பட்டத்தை வென்றுள்ளார். செரீனா வில்லியம்ஸ் பெற்ற இந்த பட்டத்தைப் பெற்றதன் மூலம் எங்கள் இருவரின் பெயரும் ஒரே வாக்கியதில் இடம் பெரும் என்பது எனக்கு பெருமைக்குரியதாக உள்ளது என்று கோகோ கூறியுள்ளார்.