சுதந்திரப் போராட்ட வீரரும், கவிஞருமான சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியார் படத்திறக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுப்பிரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது, தனது அனல் தெறிக்கும் கவிதைகள் மூலம் பொது மக்களின் மனதில் விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பியவர்.
ஒரு கவிஞராக மட்டுமல்லாமல், பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டு ஜொலித்தவர்.
தனது தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக் கொண்ட பாரதியார், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று போற்றி பாடியுள்ளார்.
விடுதலைப் போராட்ட காலத்தில், இவரது தேசிய உணர்வு மற்றும் கவிதைகள், மூலம் மக்களை ஒருங்கிணைத்ததால், தேசிய கவி எனப் பாரதியார் போற்றப்படுகிறார்.
இப்படிப் புகழ் பெற்றச் சுதந்திரப் போராட்ட வீரரான பாரதியாரின் பிறந்த நாள் இன்று. கடந்த 1882 -ம் ஆண்டு எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார்.
அவரது பிறந்த நாளில், பாரதியாருக்கு, மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், பாஜக மாநில அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியார் படத்திறக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இரு கரம் கூப்பி அவரை தொழுது வணங்கினார்.
நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தேசத்தின் சிறந்த மகன் மகாகவி பாரதிக்கு, இந்நாளில் நன்றியுள்ள தேசம் அஞ்சலி செலுத்துகிறது. அவர் நம் இதயங்களில் வாழ்ந்து பாரதத்தை #விஸ்வகுரு ஆக கட்டமைக்க உத்வேகமூட்டுகிறார். pic.twitter.com/tptzYJ9xb4
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 11, 2023
இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவிலும் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தேசத்தின் சிறந்த மகன் மகாகவி பாரதிக்கு, இந்நாளில் நன்றியுள்ள தேசம் அஞ்சலி செலுத்துகிறது. அவர் நம் இதயங்களில் வாழ்ந்து பாரதத்தை #விஸ்வகுரு ஆகக் கட்டமைக்க உத்வேகமூட்டுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.