அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை முதல் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றர்.
இதில், சென்னை, கோவை, நாமக்கல். திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 8 இடங்கள் சோதனை நடக்கிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் ஒருவரின் இல்லத்திலும் சோதனை நடைபெறுகிறது.
அதேபோல, செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனை நடைபெறுகிறது.
திண்டுக்கல்லில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, தொழிலதிபர் ரத்தினம், அவரது மைத்துனர் வீடு மற்றும் தொழிலதிபர் கோவிந்தன் என்பவர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், தொழில் அதிபர் ரத்தினம் மணல் குவாரி தொடர்புடைய தொழில் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, 3 முறை அதிரடி சோதனை நடந்த நிலையில் மீண்டும் சோதனை நடந்து வருகிறது.