விண்வெளி ஆராய்ச்சியை விட அதிகமாக நம் ஆழ்கடலில் அதிக ஆச்சரியங்கள் காத்துகொண்டு இருக்கின்றன. இந்தியா இதுவரை ஆளில்லாத நீர்மூழ்கிகள் கொண்டு ஆழ்கடலை ஆய்வு செய்து வந்தது. 2021 அக்டோபரில் ‘சமுத்ராயன்’ என்ற கடல் பணியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமுத்ராயன் திட்டத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது. சமுத்ரயான் திட்டமானது, ஆழ் கடலுக்குள் இருக்கும் இதுவரை வெளிஉலகுக்குத் தெரியாததை வெளியே கொண்டு வர, மனிதர்களுடன் கடலுக்கு அடியில் 6000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள நீரில் மூழ்கக்கூடிய நீர்மூழ்கிக் கப்பலை அனுப்புகிறது.
இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி, கடலுக்கு அடியில் என்னயிருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்த இந்த சமுத்ரயான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளின் கடல் ஆராயும் நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துள்ளது.
சமுத்திரயான் திட்டத்தின் கீழ், தாதுக்கள், நுண் உலோகங்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக இந்திய, மூன்று பணியாளர்களை 6,000 மீட்டர் ஆழத்திற்கு ‘மத்ஸ்யா 6000’ என்ற நீர்மூழ்கிக் கப்பலை அனுப்ப உள்ளது.
“இந்த பணி 2026 ஆம் ஆண்டுக்குள் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்தார்.
புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான சென்னையைச் சேர்ந்த தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) மூலம் ‘மத்ஸ்யா 6000’ வாகனத்தை வடிவமைத்து உருவாக்கி வருகிறது.
இந்த வாகனம் சாதாரண செயல்பாட்டின் கீழ் 12 மணிநேரமும், மனித பாதுகாப்புக்காக அவசரகாலத்தில் 96 மணிநேரமும் தாங்கும் திறன் கொண்டது. வாகனத்தின் வடிவமைப்பு நிறைவடைந்துள்ளதுடன், வாகனத்தின் பல்வேறு கூறுகளை சோதனை செய்து வருகின்றனர். விரைவில் நிகழ் நேர பயன்பாட்டு சோதனைக்கு உற்படுத்தப்படும்.
இத்திட்டம் மூலம் கடலுக்கு அடியில்,நிக்கல், கோபால்ட், மாங்கனீசு, பூமியின் அரியதாதுக்கள் போன்ற கனிம வளங்களை கண்டுபிடிப்பதற்கும் அதன் மாதிரிகளை சேகரிப்பதற்கும் மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்புகின்றனர். அறிவியல் ஆராய்ச்சி தவிர, கடலுக்கு அடியில் உள்ள இயற்கை வளங்களை ஆய்வு செய்யவும், ஆழ் கடல் சுற்றுலா பணிகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.
ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்காக 6000 மீட்டர் ஆழம் வரை ஒருங்கிணைந்த நீர்மூழ்கி இயந்திரம் மற்றும் இணைக்கப்பட்ட ஆளில்லா தானியங்கு வாகனங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்தியாவின் ரூ.4,077 கோடி மதிப்பிலான ஆழ்கடல் இயக்கத்தின் ஒரு பகுதியாக சமுத்ராயன் உள்ளது.
சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சமுத்ராயன் ‘மத்ஸ்யா 6000’ நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் உள்ளது. இதனைப் மத்திய புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜு பார்வையிட்டார்.
இது ‘மத்ஸ்யா 6000’ நீர்மூழ்கிக் கப்பல், ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்காக, 6 கிமீ கடல் ஆழத்தில் 3 மனிதர்களை நீர்மூழ்கிக் கப்பலில் அனுப்ப இந்தியாவின் ஆழ்கடல் மிஷன் ‘சமுத்ராயன்’ திட்டம். இந்த திட்டம் கடல் சூழலை சீர்குலைக்காது. டீப் ஓஷன் மிஷன் பிரதமரின் ‘நீலப் பொருளாதாரம்’ பார்வையை ஆதரிக்கிறது மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வாழ்வாதாரம் மற்றும் வேலைகளை மேம்படுத்துதல் மற்றும் கடல் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதைக் கருதுகிறது.
ஆழ்கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொள்ளும் சமுத்ராயன் திட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளது. விண்வெளியைப் போல கடலின் ஆழத்தை நாம் ஆராய வேண்டும். அதற்கான பணிகளில் நம் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றார்.