அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகையை யொட்டி, 120 நாட்களுக்கு முன்பே இரயில் டிக்கட் முன்பதிவு தொடங்க உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது, பொது மக்களின் நலன் கருதி, 120 நாட்களுக்கு முன்பு இரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.
அந்த வகையில், அடுத்த ஆண்டு, அதாவது 2024-ம் ஆண்டு, ஜனவரி 14 -ம் தேதி போகி பண்டிகையும், 15 -ம் தேதி பொங்கல் பண்டிகையும், 16-ம் தேதி மாட்டுப் பொங்கலும் 17-ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
இதனால், வெளியூரில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம். இதற்காக, 120 நாட்களுக்கு முன்னரே, இரயில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 13-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 11 -ம் தேதியும், 14-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 12 -ம் தேதியும், 15-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13 -ம் தேதியும், 16-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 14 -ம் தேதியும் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, செப்டம்பர் 17-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15 -ம் தேதியும், 18 -ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16 -ம் தேதியும், 19-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 17 -ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம் என்றும், பண்டிகை காலத்தில், நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில், இந்த முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.
இரயில் டிக்கட் முன்பதிவு செய்வோர், இரயில் நிலையங்களில் நேரிடையாகச் சென்றும், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.