ஜி20 மாநாட்டில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்டியதற்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மைக்ரோசாப்ஃட் நிறுவனர் பில்கேட்ஸ் நன்றி தெரிவித்திருக்கிறார்.
இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு, தேசியத் தலைநகர் டெல்லியில், கடந்த 9, 10-ம் தேதிகளில் நடந்து முடிந்திருக்கிறது. இம்மாநாட்டில் டெல்லிப் பிரகடனம் அனைத்து நாடுகளாலும் ஒருமனதாக ஏற்கப்பட்டது, வரலாற்று சாதனையாகக் கருதப்படுகிறது. அதேபோல, இம்மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் தொடர்பாகவும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையில், டிஜிட்டல் பொருளாதாரத்தில் உட்கட்டமைப்பு தொடர்பாகவும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டிருக்கிறது.
அதாவது, டிஜிட்டல் பொருளாதாரத்தில் பாதுகாப்பு, பின்னடைவு மற்றும நம்பிக்கையை கட்டியெழுப்புவதின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. பாதுகாப்பான, நம்பகமான, பொறுப்புணர்வுகளை உள்ளடக்கிய டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு தேவை என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், மனித உரிமைகள், தனிப்பட்ட தரவு, அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றை வளர்க்கவும், சேவைகளை வழங்கவும், புதுமைகளை புகுத்தவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த டிஜிட்டல் பொருளாதார பொது உட்கட்டமைப்பு தீர்மானத்துக்கு அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ஃட் நிறுவனர் பில்கேட்ஸ், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பில்கேட்ஸ் வெளியிட்டிருக்கும் பதிவில், “நிலையான வளர்ச்சி இலக்குகளின் முக்கியமான முடுக்கியாக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் பங்கு குறித்து ஜி20 உச்சி மாநாட்டில் ஒரு அற்புதமான ஒருமித்த கருத்து எட்டப்பட்டிருக்கிறது. பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நியாயமான உலகத்தை ஆதரிக்கும் டிஜிட்டல் பொதுக்கட்டமைப்பின் திறனைப் பற்றி நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
The #G20 reached a groundbreaking consensus on the role of digital public infrastructure as a critical accelerator of the Sustainable Development Goals. I'm optimistic about the potential of DPI to support a safer, healthier, and more just world. Kudos to PM @narendramodi.…
— Bill Gates (@BillGates) September 11, 2023