சென்னை ஈ.சி.ஆரில் பனையூர் அருகே ஆதித்யராம் மைதானத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின், மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி 10 -ம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, ஒரு தனியார் அமைப்பிடம் உரிமை வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனம், வழக்கமான கட்டணத்தைவிட, 4 மடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்துள்ளது. அதாவது, இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை பலரும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளனர்.
இப்படிப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் கிழக்கு கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும், இசை நிகழ்ச்சியைப் பார்க்காமல் வீடு திரும்பியுள்ளனர்.
திரும்பிய திசை எல்லாம் கூட்டம் நிரம்பி வழிந்ததால், பலர் அங்கேயே வாந்தி எடுத்து, மயக்கமடைந்துள்ளனர். மேலும், சிலர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளனர். ஆக மொத்தம், பலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் வாகன நிறுத்துமிடத்தில் வசதியும் செய்யவில்லை. இதனால், ஈ.சி.ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நிலவியது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. பல மணி நேரம் ஊர்ந்து சென்றது.
இதனால், பாதிக்கப்பட்ட ரசிகர்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த துயரம் , அவமானம், சிரமம் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுக் கொதித்தனர்.
இதனால், விரிவான விசாரணைக்கு, தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதில், பயந்து போன ஏர்.ஆர்.ரகுமான், இந்த பிரச்சனைகளுக்குத் தான் பொறுப்பேற்பதாகத் தெரித்துள்ளார்.
இதனிடையே, ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேர் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். அதாவது, திசா மிட்டல் மற்றும் தீபா சத்யன் ஆகியோர் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின், மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி இரசிகர்களை மறக்கவிடாமல் செய்துவிட்டதுதான் பெரும் சோகம்.