காங்கிரஸ் கட்சியும் இண்டியா கூட்டணியும் வேறு மத தெய்வங்களை விமர்சிக்க தைரியம் இருக்கிறதா? என பாஜக செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக கட்சி தலைமையகத்தில் செய்தியாளரைப் பாஜக செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
காங்கிரஸ் கட்சியையும் இண்டியா கூட்டணியையும் நான் கேட்கிறேன் – வேறு மத தெய்வங்களை விமர்சிக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறதா? அவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? அவர்களால் முடியுமா? அதைச் செய்யவார்களா? அவர்கள் மற்ற மதங்களைப் பற்றி மௌனமாக இருக்கிறார்கள் ஆனால் வெளிப்படையாக சனாதனத்தை எதிர்க்கிறார்கள்,” என்று கூறினார்.
சமீபத்தில் நடந்த திமுக நிகழ்ச்சியில் சனாதன தர்மம் குறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதற்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க.வினர், “திமுக கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறிய கருத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.‘The cat is out of the bag’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அவர்கள் நினைத்தது தெளிவாகி விட்டது. சனாதன தர்மத்தை எதிர்த்து, முடிக்கவே இண்டியா கூட்டணி உருவானது.
ஓட்டு வங்கி அரசியலுக்காக சனாதனம் குறித்து விமர்சனம் செய்கின்றனர். சனாதன தர்மத்திற்கு ‘ எதிராக இண்டியா’ கூட்டணி உள்ளது. இக்கூட்டணியினர், சனாதனத்தை எய்ட்ஸ் நோயுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். ஏற்கனவே, உத்தவ் தாக்கரேவும், சமாஜ்வாதியும் சனாதன தர்மத்தை விமர்சனம் செய்துள்ளன.
இந்த விவகாரத்தில் சோனியா மவுனம் காப்பது ஏன்? அவர் மவுனம் காப்பது, விமர்சனத்தை ஏற்றுக் கொண்டது போலவே தெரிகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் இதுவரை, இராமர் கோயிலுக்கு செல்லவில்லை எனக் கூறினார்.