டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க நிதியமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நிதின் கட்கரி தனது எக்ஸ் பதிவில்,
There is an urgent need to clarify media reports suggesting an additional 10% GST on the sale of diesel vehicles. It is essential to clarify that there is no such proposal currently under active consideration by the government. In line with our commitments to achieve Carbon Net…
— Nitin Gadkari (@nitin_gadkari) September 12, 2023
டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். அதுபோன்ற திட்டம் எதுவும் அரசின் தீவிர பரிசீலனையில் இல்லை.
2070க்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியத்தை அடைவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும், ஆட்டோமொபைல் விற்பனையில் விரைவான வளர்ச்சிக்கும் ஏற்ப, தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளை தீவிரமாக ஏற்றுக்கொள்வது அவசியம். இந்த எரிபொருட்கள் இறக்குமதி மாற்றுகளாகவும், செலவு குறைந்ததாகவும், சுதேசி மற்றும் மாசு இல்லாததாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.