மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெற்றால், அவர்கள் திமுகவை புறக்கணித்து, பாஜகவுக்கு தொடர்ந்து வாக்களிப்பார்கள் என கருதி, ஆதரவு அதிகாரிகள் மூலம் திமுக தடுத்து வருவதாக புகார் எழுந்துள்ள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 வழங்கும் பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி என்ற திட்டம், கடந்த 2018 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் ‘பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி ‘திட்டத்தின்கீழ், 5 ஏக்கருக்குக் கீழ் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், பிஎம் கிசான் இணையதளத்தில் அல்லது பிஎம் கிசான் செயலியில் இணைய வேண்டும். இதற்காக, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை பயன்படுத்தி இணைய வேண்டும்.
இதற்கு விவசாயிகள் தங்களது அருகில் உள்ள அஞ்சலகங்கள் அல்லது தபால்காரரை அணுகி, ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இந்த சேவையைப் பெற அஞ்சல் துறை ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்த பிறகு, விவசாயிகள் பிஎம் கிசான் இணையதளத்தில் அல்லது பிஎம் கிசான் செயலியில் OTP அங்கீகாரத்தைப் பயன்படுத்தி இகேஒய்சியை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் விவசாயின் வங்கிக் கணக்கில் நிதி உதவி நேரடியாகக் கிடைக்கும்.
ஒவ்வொரு வருடமும் 3 தவணையாக ரூ.2,000 வீதம், இந்த நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில், கொரோனா காலத்தில், தமிழகம் முழுவதும் விவசாயிகள் என்ற பெயரில், 41 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். ஆனால், இதில், வெறும் 25 லட்சம் பேர் மட்டுமே நிதி உதவி பெறத் தகுதியுள்ளவர்கள் என அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், அவர்களது முழு விவரத்தைப் பதிவு செய்யவில்லை.
இதுவரை 14 -வது தவணை நிதி உதவி வழங்கிய மத்திய அரசு, 15 -வது தவணையை விடுவிக்கத் தயாராகி வருகிறது. இதனால், 15 -வது தவணை, நிதி உதவி பெறுவதில் தமிழக விவசாயிகளுக்குச் சிக்கில் நீடித்து வருகிறது.
தமிழக அரசு அலட்சியம் காரணமாக, மத்திய அரசு நிதி உதவி பெறுவதில், தமிழக விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதி, விவசாயிகளுக்குக் கிடைத்துவிட்டால், அவர்களது வாக்கு பாஜகவுக்குச் சென்றுவிடும் என்பதால், ஒரு சில அதிகாரிகள் மூலம் திமுக அண்டர்கிரவுண்ட் அரசியல் செய்து, நிதி உதவி கிடைக்காமல் செய்து வருவதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.