ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ நாய் உயிரிழந்தது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என் கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ராணுவவீரர் ஒருவர் மரணமடைந்துள்ளார். ஒரு பயங்கவாதி சுட்டு கொல்லப்பட்டார். போலீஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலின் போது தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி படை வீரர்கள் துரத்தி சென்றனர். அவர்களுக்கு முன்னாள் லேபரடார் வகையை சேர்ந்த ராணுவத்தின் பெண் மோப்ப நாய் 6 வயதே ஆனா கென்ட் சென்றுள்ளது. அப்போது பயங்கவாதிகளின் துப்பாக்கிச்சூட்டின் போது கென்ட் முன்னே பயந்து உயிரிழந்தது.
தன்னுடைய பாதுகாவலரை பாதுகாக்கும் வகையில் அது உயிர் தியாகம் செய்துள்ளது. இதனால் அதற்க்கு பின்னல் வந்துகொண்டிருந்த ராணுவவீரர்கள் உயிர் தப்பினர் என்று ஜம்மு பாதுகாப்பு படை வட்டாரம் தெரிவிக்கினர்.
சமூக ஊடகங்களில் மக்கள் கென்ட்டுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . கென்டின் துணிச்சல் மற்றும் இறுதி தியாகத்திற்காக மக்கள் பாராட்டினர். ஐந்து வருட கடமையின் போது, கென்ட் எட்டு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இருந்துள்ளது.