2023-யின் ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
ஆசியக் கோப்பை 2023 இன்றைய ஆட்டம் இலங்கையில் உள்ள கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியானது மதியம் 3:00 மணிக்கு தொடங்குகிறது.
இந்த ஆண்டு நடைபெறும் ஆசியக் கோப்பைத் தொடரில் இதுவே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் போட்டி. இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் இலங்கை அணி மூன்றில் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த தொடரில் இதுவரை பாகிஸ்தான் 4 முறை விளையாடியுள்ளது. அதில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது ஒரு போட்டியில் தோல்வியடைத்துள்ளது, மேலும் ஒரு போட்டி மழையால் தடை செய்யப்பட்டது.
மேலும் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் உள்ளன. இதில் வெற்றி பெரும் அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் போட்டியின் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் 63% பாகிஸ்தான் வெற்றிப் பெறும் என்றும் 37% இலங்கை வெற்றிப் பெறும் என்றும் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.