வாக்காளர் பட்டியல் ஆதார் எண் பதிவு செய்யவும், திருமணம் குறித்து பதிவு செய்யவும் மற்றும் அரசுப் பணிகளில் சேரவும் ஒரே ஆவணமாகப் பிறப்புச் சான்றிதழ் பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஒருவரது பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைத் தேசிய மற்றும் மாநில அளவில் தகவல்களை உருவாக்கும் வகையில் இந்த சட்டம் வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம், கல்வி நிலையங்களில் சேரவும், வாகன ஓட்டுநர் அனுமதி பெறவும், வாக்காளர் பட்டியல் ஆதார் எண் பதிவு செய்யவும், திருமணம் தொடர்பாக பதிவு செய்யவும் மற்றும் அரசுப் பணிகளில் சேரவும் ஒரே ஆவணமாகப் பிறப்புச் சான்றிதழ் பயன்படுத்தலாம்.
சமூக நலன் மற்றும் டிஜிட்டல் வழியில் வெளிப்படப்படத் தன்மையுடன், திறமையாகவும் செயல்படுத்த உதவி செய்ய முடியும் என்றும், இதன் மூலம் ஒருவரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தை நிரூபிக்கப் பிறப்புச் சான்றிதழ் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், நடைபெற்ற நாடாளுமன்றம் கூட்டத் தொடரில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
பிறப்பு சான்றிதழ் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை எளிதில் பெறமுடியும் என்பதால், பொது மக்கள் இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.